கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் கிரெடிட்கார்டு நிலுவைத் தொகை ரூபாய் 1.41 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் 29.6% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியை எட்டி உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக நாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 11 மாதங்களில் கிரெடிட் கார்டு மூலம் கொள்முதல் செய்யப்பட்ட மதிப்பு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் பதிவாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு ஆன்லைன் வர்த்தகம் எழுச்சி பெற்று இருப்பதாகவும், கிரெடிட்கார்டு அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.