இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் பயணங்களையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம் என்பதால் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள். அதன் பிறகு தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலானோர் ரயிலில் செல்லும்போது மற்ற பயணிகள் இரவு நேரத்தில் பேசுவது தொந்தரவாக இருக்கிறது என்பது ரயில் பயணிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்நிலையில் ஐஆர்டிசி ரயில் பயணங்களின் போது பயணிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயிலில் செல்லும்போது புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் சட்டப்படி குற்றமாகும்.

ரயிலில் பயணம் செய்யும்போது இரவு நேரத்தில் செல்போனில் பேசக்கூடாது. அதன்பிறகு இயர் போன் பயன்படுத்தாமல் சத்தமாக போனில் பாட்டு கேட்கக்கூடாது. இரவு 10 மணிக்கு பிறகு டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் பரிசோதனை செய்வதற்கு வர மாட்டார். எனவே இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் குழுவாக இருந்து அரட்டை அடிக்க கூடாது. மிடில் பெர்த் பயணிகள் தங்களுடைய இருக்கையை திறந்து வைத்தால் கீழே உள்ள பயணிகள் எதுவும் சொல்லக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன் ஆர்டர் மூலம் ரயிலில் உணவு வாங்க கூடாது.

ஆனால் இரவு கேட்டரிங் மூலம் உங்களுடைய காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். ஏசி பெட்டியில் பயணம் செய்வோர் அதிகபட்சமாக 70 கிலோ வரையிலும், ஸ்லீப்பர் வகுப்பில் அதிகபட்சமாக 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் அதிகபட்சமாக 35 கிலோ வரையிலும் லக்கேஜ்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். மேலும் ஒரு வேளை கூடுதலாக லக்கேஜ் எடுத்து செல்ல வேண்டும் என்றால் அதற்காக தனி கட்டணம் செலுத்தி ஏசி கோச்சில் 150 கிலோ வரையிலும், ஸ்லீப்பர் கோச்சில் 80 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் 70 கிலோ வரையிலும் லக்கேஜ்களை எடுத்து செல்லலாம்.