சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் நின்றுவிட்டு 11:50க்கு சென்னை வந்துவிடும். இதையடுத்து சென்னையிலிருந்து மதியம் 2.25க்கு கிளம்பி இரவு 8:15க்கு கோவை சென்றடையும்.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் குறித்து எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியதாவது “கடந்த 2016 ஆம் வருடம் சீனா சென்றிருந்தபோது புல்லட் ரயிலில் பயணித்தேன். அப்போது என் மனதில் ஒரு பெரிய ஏக்கம் இருந்தது. நம் நாடு எப்போது இந்த மாதிரியான ரயில்களை கொடுக்கும் என்று. தற்போது அந்த கனவு நனவாகியுள்ளது என அவர் கூறினார்.