சர்வதேச நாணய நிதியம் தற்போது உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 5.9 சதவீதமாக சர்வதேச நிதியம் குறைத்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1% உயரும் என சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்த நிலையில் தற்போது 5.9 சதவீதமாக குறைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2022-23 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் உயரும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதே போன்று உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை குறைத்துள்ளது. மேலும் வட்டி விகிதம் உயர்வு மற்றும் உலக பொருளாதார சூழலால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் போன்றவைகளால் சர்வதேச நிறுவனங்கள் வளர்ச்சிக்கான கணிப்பை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.