இந்தியன் சூப்பர் லீக் தொடர் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 13 அணிகள் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலை 2 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நடப்பு இந்தியன் சூப்பர் லீக் தொடரில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில், மொத்தம் 3 போட்டிகளில் வெற்றி பெற்று பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

2-வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. 3-ம் இடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி உள்ளது. 4-வது இடத்தில் மோகன் பாகன் உள்ளது. அதோடு 5-வது இடத்தில் கோவாவும், 6-வது இடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டும் உள்ளது. இந்த பட்டியலில் சென்னையின் எஃப்சி 1வெற்றி, 1 தோல்வியுடன் 8-வது இடத்தில் உள்ளது.