பிஷன் சிங் பேடி இந்தியாவுக்காக 20க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக விளையாடியவர். பிஷன் சிங் பேடி, பிரசன்னா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் கர்நாடகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிகளுக்காக அந்த சமயத்திலே மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தார்கள். இந்திய அணி பெரும்பாலான அணிகளோடு விளையாடும் போது முக்கிய விக்கெட்டுகள் அனைத்துமே சுழற் பந்துவீச்சாளரிடமே  எதிரணி பறி கொடுக்கும் நிலைமை இருந்தது. அந்த அளவுக்கு மிகவும் பிரபலமாக இருந்தார் பிஷன் சிங் பேடி.

அது தவிர பிஷன் சிங் பேடிபேடி மிகவும் தைரியமாகவும்,  வெளிப்படையாக எதையும் பேசக் கூடியவர். தன்னுடைய சக கிரிக்கெட் வீரர்கள்,  நண்பர்கள் மற்றும் அனைவர்களோடும் மிகவும் சகஜமாக பழகக் கூடியவர்.  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்புரெஸ்ட்டரில் பிறந்து, பின்னர் டெல்லியில் வந்து மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர்.

77 வயதாக கூடிய பிஷன் சிங் பேடி சமீபத்திலே ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.  1967 முதல் இவர் பல போட்டிகளில் விளையாடி மிகவும் பிரபலமாக இருந்தது. 1979 ஆம் வருடம் வரை அவர் கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட 266 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் ஒரு நாள் போட்டிகள் தொடங்கியிருந்தன. அதிலும் அவர் 10 ஒரு நாள் போட்டி விளையாடி அதிலும் 7 விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். அந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட்டில் முக்கிய இடம் பெற்றவருடைய மறைவு இந்திய கிரிக்கெட் உலகிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.1970 இல் பிஷன் சிங் பேடி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது