ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் (2 வெள்ளி, ஒரு வெண்கலம்) கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1500 மீட்டர் Decathlon போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 7666 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

முன்னதாக ஆசிய விளையாட்டில் மும்முனை தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. மும்முனை தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழ்நாட்டு வீரர் பிரவீன் சித்ரவேல் அசத்தியுள்ளார். மும்முனை தாண்டுதல் போட்டியில் 16.68 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கம் வென்றார் பிரவீன் சித்திரவேல்.

அதேபோல ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஆண்கள் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 800 மீட்டர் ஆண்கள் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் முகமது அப்சல் ஒரு நிமிடம் 48.43 வினாடிகளில் இலக்கை எட்டினார்.