இந்திய பங்குச் சந்தை நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் உலகளவில் 2ஆவது இடத்தை பிடித்து பெருமை பெற்றுள்ளது. ஹாங்காங் முதலிடம் பிடித்துள்ள நிலையில், சிங்கப்பூர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் பங்குச் சந்தையில் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக mutual fund திட்டங்களில் இந்திய மக்கள் அதிக அளவில் முதலீடு செய்வதுடன், அந்நிய முதலீட்டாளர்களும் இந்திய பங்குகளை குவிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கான சான்றாக, மொத்தம் ₹1.80 லட்சம் கோடி mutual fund திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு, ₹92,400 கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர்.