தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரிலும் கனமழை பெய்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இன்று பெங்களூரில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.