வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக பிளேயிங் 11ல் ஆட வாய்ப்புள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் மழையால் டிரா ஆனது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 27 முதல் தொடங்குகிறது. ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பராக யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும்? சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் யார் இடம் பெறுவார்கள்.. பார்க்கலாம்..

ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இன்னிங்ஸைத் தொடங்குவார்கள் :

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தொடக்க ஜோடி ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் என்பதில் சந்தேகமில்லை. எனவே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பெஞ்சில்அமர வாய்ப்புள்ளது. அதன் பிறகு விராட் கோலி மூன்றாவது இடத்தில் விளையாடுவார். கடந்த சில நாட்களாக, ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார் சுப்மான் கில். இந்த வடிவத்தில் இரட்டை சதம் அடித்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் ஓபன் ஆக, விராட் கோலி மூன்றாம் இடத்தில் விளையாடுவார்.

விக்கெட் கீப்பர் யார்? சஞ்சு அல்லது இஷான் :

சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆசிய கோப்பை அணியில் இடம் பெற சூர்யாவுக்கு வாய்ப்பு உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக அவருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் சூர்யா அற்புதமாக செயல்பட்டால், ஆசிய கோப்பை அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதன் பிறகு ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் விளையாடுவார். விக்கெட் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆறாவது இடத்தில் விளையாடி, மேட்ச் ஃபினிஷராக விளையாட வாய்ப்பிருக்கிறது. இதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா களமிறங்குவார். ஹர்திக், சஞ்சு, ஜடேஜா ஆகியோர் ஃபினிஷர்களாக ஆட வாய்ப்புள்ளது.

பந்து வீச்சாளர் யார்?

குல்தீப் யாதவ் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகக் காணப்படுவார். ஜடேஜாவும், குல்தீப் யாதவும் சுழற்பந்து வீச்சைக் கையாளுவார்கள். இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கலாம். இதில் ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்கலாம்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எப்படி இருக்கும்?

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி :

ரோஹித் சர்மா (கே), ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஷுப்மான் கில், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா (து.கே), யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.