சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

2023 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4ல் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை மழை தொடர்ந்து கெடுத்துவிட்டது. இந்த சூப்பர் 4ன் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடியது, அது மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் சூப்பர்-4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதின. இந்த போட்டி கொழும்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கியது. ஆனால் மழை மீண்டும் இடையூறு செய்தது. அதன் பிறகு ரிசர்வ் தினத்தில் (செப்டம்பர் 11) போட்டி நடைபெற்றது. இம்முறை கிடைத்த வாய்ப்பை வீணடிக்காத இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இதையடுத்து மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியவில்லை. கே.எல்.ராகுல் (17), விராட் கோலி (8) அவுட்டாகாமல் இருந்தனர். பின்னர் போட்டி ஒரு நாள் கழித்து அதாவது ரிசர்வ் நாளில் (செப்டம்பர் 11) நடைபெற்றது.

ரிசர்வ் நாளில் இந்த ஸ்கோருடன் விளையாடிய இந்திய அணி, பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை வீழ்த்தத் தொடங்கியது. ரிசர்வ் நாளில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை. விராட் கோலியும், கே.எல்.ராகுலும் வலுவான இன்னிங்ஸ் விளையாடினர். ராகுல் தனது 6வது சதத்தையும், கோலி தனது 47வது ஒருநாள் சதத்தையும் அடித்தார்.

ரிசர்வ் நாளில், ராகுல் மற்றும் கோலி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 106 பந்துகளில் 111 ரன்களும், கோலி 94 பந்துகளில் 122 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவருக்கும் இடையே 194 பந்துகளில் 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. கோலி-ராகுலின் இந்த இன்னிங்ஸால் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தது.  பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியால் 32 ஓவரில் 128 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.  இந்தப் போட்டியில், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் காயம் காரணமாக களத்திற்கு வர முடியாதததால், பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்தவுடன் போட்டி முடிந்துவிட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபகார் ஜமான் மட்டுமே 27 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், ஆகா சல்மான் மற்றும் இப்திகார் அகமது ஆகியோரின் பேட்களில் இருந்து தலா 23 ரன்கள் வந்தது. இது தவிர கேப்டன் பாபர் அசாம் 10 ரன்கள் எடுத்தார். இது தவிர பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எவராலும் 10 ரன்களை கூட எட்ட முடியவில்லை.

ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி :

ரன்களின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இது. ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை இவ்வளவு பெரிய ஸ்கோர் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்ததில்லை. முன்னதாக, 2008ல் மிர்பூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. இந்தியா இன்று இலங்கையை வீழ்த்தினால் ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

சூப்பர் 4 அட்டவணை :