இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், அகமதாபாத் மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இழந்தது. தற்போது அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதற்கான இறுதி மற்றும் 3வது டி20 போட்டி இன்று (பிப்.1 புதன்கிழமை) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 வானிலை அறிக்கை:

நாளை அகமதாபாத்தில் 29% ஈரப்பதம் மற்றும் 8 kmph காற்றின் வேகம். வெப்பநிலை சுமார் 29 டிகிரி செல்சியஸ் இருக்கும். ஆட்டத்தின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை.

இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 பிட்ச் அறிக்கை :

நரேந்திர மோடி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானம். இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங்கிற்கு சிறந்த உதவியாக இருக்கும். ஆட்டம் முன்னேறும்போது வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையில், ஸ்பின்னர்கள் ஆட்டத்தின் நடுப்பிரிவில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் :

இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 171 ஆகும்..

சேஸிங் அணிகளின் பதிவு:

இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இங்கு சிறப்பான சாதனை படைத்துள்ளது. இந்த மைதானத்தில் 60 சதவீத வெற்றியை தக்கவைத்துள்ளனர்.

இந்தியா லெவன் (சாத்தியமானது) :

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிவம் மாவி, யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து லெவன் (சாத்தியமானது) :

ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர்.