உலகக் கோப்பை 2023க்குப் பிறகு, டீம் இந்தியாவின் கவனம் T20 கிரிக்கெட் மீது இருக்கும். ஏனெனில் டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு அதாவது 2024ல் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருடன் இந்த போட்டிக்கான ஆயத்த பணிகளை இந்திய அணி தொடங்கவுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடர் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. இந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் அணியை வழிநடத்துவார். அதே நேரத்தில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.

மறுபுறம், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகர் காயம் காரணமாக தொடரை இழக்கிறார். ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது ஆஷ்டன் அகர் காயமடைந்தார். இது தவிர உலகக் கோப்பையில் விளையாடி வரும் சில வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நவம்பர் 23ம் தேதி நடக்கிறது. 2வது போட்டி திருவனந்தபுரத்தில் நவம்பர் 26ம் தேதி, மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நவம்பர் 28ம் தேதி நடக்கிறது. நான்காவது டி20 போட்டி நாக்பூரில் டிசம்பர் 1ம் தேதியும், தொடரின் கடைசி போட்டி டிசம்பர் 3ம் தேதி ஹைதராபாத்திலும் நடக்கிறது.

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

மேத்யூ வேட் (கேப்டன்), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா.