
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மாறிரும். எப்படி சீமான் தேர்வுளில் தமிழ் பெயரில் கொண்டு வருவ…. எம்.ஜி.ஆர் போட்ட சட்டத்தை மறுபடி புதுப்பிப்பேன்…. புதுப்பிச்சி, கருணாநிதி மாதிரி ஏமாற்ற மாட்டேன்…. ஜெயலலிதா மாதிரி கைவிட்டு போக மாட்டேன்… செயல் படுத்துவேன்….. ஏனென்றால் நான் நல்ல தமிழ் தாய்க்கும், தமிழ் தகப்பனுக்கும் பிறந்தவன்.
அதுக்கு தமிழ் மீட்சி படை ஒன்னு வச்சிருப்பேன்…. தமிழ் மீட்சி படை கடைகளில் தமிழ் பெயர் வையுங்க என சொல்லி சொல்லி பாப்பான்…. கேக்கல… கடைய உடை…. தட்ஸ் ஆல்…. அங்க தமிழில் எழுது…. தமிழன் காசு வேணும்…. தமிழ் வேணாமா ? அத எழுது என தமிழ் மீட்சி படை சொல்லும் …. மாத்தி எழுது விளம்பர பலகையையில்…. இல்ல ரொம்ப பேசுறான் அப்படின்னா… கடைக்கு மின்சாரத்தை துண்டி… தண்ணீர் போறத நிறுத்து….. கடையை பூட்டு….. முத்திரை வச்சிட்டு வந்துரு….
தமிழில் பெயர் எழுதுனா… வந்து கும்பிட்டு, மன்னிப்பு கடிதம் குடுத்தானா…. திறந்து விடு… இந்த ஆட்டத்தலாம் வேற எங்கையாச்சும் வச்சுக்கணும். அப்போ தமிழகத்தின் தமிழ் தெருவில் தமிழ் ஸ்ட்ரீட்(street)-தெரு, அவின்யு (avenue )-நிழற்சாலை, எஸ்ட்டென்ஷன் (extension) -விரிவு, செக்டர்(sector) -பிரிவு,
fax – அடுத்தகம். இப்போ எல்லாம் fax இருக்கு, extension இருக்கு, காலனி இருக்கு, குடியிருப்பு இல்ல.. நல்லா கவனிச்சிக்கணும். ஸ்ட்ரீட் இருக்கு, தெரு இல்ல. வருது தெரு, வருது நிழற்சாலை, வருது விரிவு, பிரிவு, அடுத்தகம், குடியிருப்பு வருது. எப்போ வருது ? நாம் தமிழர் ஆட்சி மலரும் போது வருது, அடுத்த நொடியில் இருந்து வருது என தெரிவித்தார்.