நாட்டில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், தற்போது UPI மூலம் பண பரிவர்த்தனை செய்யும் நபர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் பலரிடையே அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை UPI மூலமாக பேமெண்ட் செய்வதில் எந்தவித கட்டணமும் இல்லை என்பது மக்கள் மத்தியில் பெரும் ஆதரவாக இருந்தது.

ஆனால் இனி, Paytm, Google Pay, PhonePe போன்ற பிரபலமான ஆன்லைன் பேமெண்ட் செயலிகளின் மூலம் பணம் செலுத்தும்போது ரூ.15 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதி, ரீசார்ஜ், பில் பேமெண்ட், பெட்ரோல் மற்றும் டீசல் செலுத்தல், ரயில்-விமான டிக்கெட், ஃபாஸ்டேக், கேஸ் புக், டிடிஎச் ரீசார்ஜ் உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் மக்கள் அதிக அளவில் UPI பயணப்படுத்தி வரும் நிலையில், இந்த கட்டணம் நடைமுறைக்கு வந்தால், பொதுமக்கள் மத்தியில் கூடுதல் சுமையாக பார்க்கப்படுகிறது. UPI பேமெண்ட் ஒரு முக்கிய வளர்ச்சி அடைந்த தொழில்நுட்ப சாதனையாக இருந்தாலும், அதற்கான கட்டணங்களை விதிப்பது மக்கள் மத்தியில் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.