நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பனமரத்தை நீ வெட்டினால் உனக்கு பாடையை கட்டிடுவேன். கொன்னேபுடுவேன் உன்னை.  தொலைத்துவிடுவேன்…  பனைமரத்தை வெட்ட முடியாது ராஜா… மரத்தை எல்லாம் அப்படி வெட்ட முடியாது.  உன் தோட்டத்துல நீ நட்டு வளர்த்த மரமா இருந்தாலும்,  என்கிட்ட அனுமதி வாங்கணும். ஒரு மரத்தின் கிளைகளை வெட்டினால் மனிதர்களின் கையை வெட்டுவது போல குற்றம் என்று கருதி உன்னை  ஆறு மாசம் தூக்கி உள்ள போட்டுருவேன்.

தொடமாட்ட நீ …. அண்ணே நான் வளர்த்துட்டேன்,  இந்த மரத்தை வளர்த்துட்டேன்..  எனக்கு இப்போ வீடு கட்டுவதற்கு இந்த மரம் தேவைப்படுது, நான் வெட்டிகிடவா…? அப்படி கேட்டால்,  வெட்டு…   நூறு மரத்தை நட்டு,  ஒரு மரம் வெட்டு. அப்ப மாநகராட்சி எங்க ஆளு கையெழுத்து போட்டு கொடுப்பார்…. வட்டாட்சியர் – மாவட்ட ஆட்சியர் கையெழுத்து போட்டு கொடுப்பாரு.. ஐயா இவரு 100 மரம் நட்டு வளத்துட்டாரு ஐயா… ஒரு மரம் வெட்ட அனுமதி வெட்டிக்க என சொல்லுவேன்.

தொலைத்து விடுவேன். அங்க எல்லாம் கார் ஓட்டிட்டு வருவான்…  மரத்தின் நிழல்ல வண்டியை விடுப்பா…. டேய் மடப்பய மகனே, மரத்து நிழலில் வண்டியை விடுவதற்கு முதல்ல ஒரு மரத்தை நட்டு வளக்கணும். அதெல்லாம் இந்த மடப்பய மக்களுக்கு எங்க புரிய போகுது ? இவங்க பிறந்தநாள் கொண்டாடுவாங்க…  ஒரு கோடி தொண்டன் என்பாங்க... ஏண்டா ஒரு கோடி தொண்டன் கிட்ட ஆளுக்கு ஒரு மரக்கன்று கொடுத்து, நட்டா ?  ஒரு கோடி மரம் வந்துரும்டா… பைத்தியக்கார பயலுக என பேசினார்.