திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, அண்ணாமலை பாஜக தலைவரான போது, ஒரு பேட்டியில் சொன்னார்.  கும்மிடிப்பூண்டியை தாண்டினால் மு.க ஸ்டாலினை யாருக்கு தெரியும் என்று சொன்னார். அந்த அண்ணாமலைக்கு இன்றைக்கு அமித் ஷாவும், மோடியும் பதில் சொல்லிவிட்டார்கள்.

இந்தியாவே ஸ்டாலினை பற்றியும்,  திராவிட முன்னேற்ற கழத்தை  பற்றியும் தான் பேசிக் கொண்டிருக்கிறது என்ற நிலைக்கு நம்முடைய இயக்கம் வளந்திருக்கின்றது. அதிமுகவில் இருக்கின்ற ஜெயக்குமார் போன்ற  அறவேக்காடுகள்  பாராளுமன்றத்திற்கும்,  சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் ? ஸ்டாலின் பயப்படுகிறாராம்.

1971இல் ஜெயக்குமார் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார். காரணம் அவருடைய அப்பாவிற்கு இது எல்லாமே தெரியும்.  அவங்க அப்பா திமுகவில் கவுன்சிலராக இருந்தார். 1971 தேர்தலில் திமுகவுக்காக வேலை செய்தவர். செத்துப்போன அவங்க அப்பா கிட்ட கேட்டா சொல்வார் என்று சொன்னால் நான் பேட்டியிலே சொன்னேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தானே  பெயர் வைத்திருக்கின்ராய். உப்பு போட்டு சோறு திங்குறவனா இருந்தார்… மானம், சூடு, சொரணை, இருந்தா ? ஒரு படி மேலேயே போய் கேட்கின்றேன்… நீ உனையாகவே எம்.ஜி.ஆர்-ரை நேசிப்பவராக இருந்தால் ? ‘பாரத்” என்ற பெயர் மாற்ற நம்பிக்கை இருந்தால்….  அதிமுக அனைத்திந்திய அண்ணா திமுக என்பதை… அனைத்து பாரத் பிரதர் திமுக என பெயர் வச்சிக்கோ. அண்ணா என்பது கூட தேவையில்லை. உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ? 10 கோடி தாறானாம் . முதல்ல IT அவன் வீட்டுக்கு போனும்…. ED அவன் வீட்டுக்கு போனும்…

நம்முடைய செந்தில் பாலாஜி ஒரு கோடி ரூபாய்க்கு தான் ஊழல் பண்ணினார் என சொல்லிட்டு இன்னைக்கு நீ ஜெயில்ல வச்சிருக்கிற. பத்து கோடி ரூபாய் இந்த சாமியாருக்கு எப்படி வந்தது? எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் அதை தாங்கி வெச்சி கொடி கட்டுகின்ற தைரியமும், துணிச்சலும் பெற்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என பேசினார்.