அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தில் 28 வயது இளைஞரின் ஆணுறுப்பை மருத்துவர் அகற்றிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 28 வயது ஆன அதிகுர் ரஹ்மான் இன்றைய இளைஞர் பிறப்புறுப்பு தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பயாப்ஸி பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டதாகவும், அப்போது அவரது அனுமதி இன்றி அவரது பிறப்புறுப்பை மருத்துவர்கள் அகற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரகுமான் அசாம் முதல்வர் ஹிமந்தா விஷ்வா ஷர்மாவுக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று எனது பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சில்க்சாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன்.

அங்கு  பையாப்சி பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதின்படி பயாப்சி சிகிச்சை மேற்கொண்டேன். அப்போது எனது அனுமதியின்றி எனது பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை மூலம்  மருத்துவர்கள் அகற்றி விட்டனர்.

சிகிச்சைக்குப் பின் கண்விழித்த பின்னரே எனது பிறப்புறுப்பு அகற்றப்பட்டு இருப்பதைக் கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இது குறித்து மருத்துவர்களிடம் கேள்வி கேட்டபோது அவர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை.

நான் தற்போது உதவியற்றவனாக இருக்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை என் வாழ்க்கை முடிந்து விட்டது. இதுகுறித்து நான் பலமுறை மருத்துவரை சந்தித்து பதிலை பெற விரும்பினேன்.

ஆனால் எனக்கு திருப்திகரமான பதிலை அவர்கள் அளிக்கவில்லை அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட சிக்கலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் எனக்கு நீதி வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.