திருநெல்வேலியில் நேற்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மது ஒழிப்பு மாநாடு என்பது ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கும் பட்சத்தில் அதை நடத்துவதில் எந்த தவறும் கிடையாது. திருமாவளவன் இந்தியா முழுவதும் மதுவிலக்கை  அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் அதற்கு தமிழகம் ஒருபோதும் தடையாக இருக்காது என்று கூறினார். மேலும் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மது விலக்கை அமல்படுத்தினால் தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் மதுவிலக்கை அமல்படுத்துவார் என்று அப்பாவு கூறியுள்ளார்.