அமெரிக்க நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த அக்சென்சர் நிறுவனமும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. அதன்படி அக்சென்சர் நிறுவனமானது சுமார் 19,000 ஊழியர்களை அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவன உயரதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார். இந்த நிறுவனத்தில் அறிவித்துள்ள பணிநீக்கம் இந்திய ஐடி நிறுவனங்களில்  எதிரொலிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

அந்த வகையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்திய ஐடி நிறுவனங்களின் மத்தியில் வர்த்தகம், வருவாய் தொடர்பாக அதிக நிறுவனங்கள் பயம்கொள்வதால் வேலைவாய்ப்புகள் பாதியாக குறையுமென சொல்லப்படுகிறது. இதன் காரணமாக 2024-ஆம் வருடத்தில் ஐடி ஊழியர்களின் ஒட்டுமொத்த சேர்ப்பு விகிதம் 40 -50 சதவீதம் வரை குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.