
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது டி20 தொடருக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான ஹர்திக் பாண்டியா முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பலர் இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கான தொடர் போட்டியில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை அதிரடியாக வீழ்த்தியது. இந்த தொடர் போட்டியில் ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமைகளை காட்டி அசத்தியுள்ளார்.
இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு வீரரான திலக் வர்மா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடர் போட்டியில் 280 ரன்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடித்து டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஐசிசி வெளியிட்ட t20 தொடருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் திலக் வர்மா தற்போது சிறந்த பேட்டிங் தரவரிசை பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். திலக் வர்மாவை அடுத்து சூரியகுமார் யாதவ் 4ஆவது இடத்தை பிடித்தார். பேட்டிங் காண சிறந்த டாப் 10 பட்டியலில் இவர்களை அடுத்து யஷஸ்வி ஜேஸ்வால் 8வது இடத்தை பிடித்துள்ளார்.