நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். இந்த சாம்பியன்ஸ் டிராபிக் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் “ஏ” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் பங்கேற்கின்றன. “பி” பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் பங்கேற்க உள்ளன.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் ஐசிசி வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரை அணியில் ஏதாவது மாற்றங்கள் செய்ய விரும்பினால் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என கால அவகாசம் கொடுத்துள்ளது. இதன்படி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விலக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5ஆவது போட்டியின் போது முதுகு பகுதியில் அடிபட்டதால் காயம் அடைந்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் சாம்பியன்ஷிப் டிராப்பியில் இருந்தும் பும்ரா விலகியுள்ளார். இதற்கு பதிலாக ஹர்ஷித்ராணா இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதன்படி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் பும்ரா விளையாடவில்லை. முதுகில் ஏற்பட்ட காயத்தால் இரண்டாவது ஐசிசி போட்டியையும் பும்பரா தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா ஐசிசி ஆண்கள் t20 உலக கோப்பை 2022 இல் பும்ரா விளையாடவில்லை.