ICC சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் சில பாதுகாப்பு காரணங்களால் இந்தியா அணி  பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது. இதனால் இந்தியா அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது தொடக்க லீக் போட்டியில் பிப்ரவரி 20-ம் தேதி வங்காளதேசத்தையும், 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2ம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்கின்றது. இந்த போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய போது, பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனது நாட்டிற்கு சென்று மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். ஆனால் இந்த போட்டிக்கு முன்னர் அவர் 100% காயத்திலிருந்து குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடல் தகுதியுடன் இருந்தால் அது அதிசயம் என்ற தகவல் வெளியானது. மேலும் மருத்துவர்களின் அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், ஒரு வேலை அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் நியூசிலாந்துக்கு அனுப்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.