சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாம்பியன் டிராபி 2025 காண போட்டி பாகிஸ்தானின் நடைபெற இருந்தது.ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பங்கேற்கவில்லை என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போட்டி வேறு எங்கும் மாற்றக்கூடாது என்று நிபந்தனையும் விதித்தது. இந்த நிலையில் ஐசிசி எந்த முடிவை எடுப்பது என குழம்பியது. இதனை அடுத்து தற்போது சாம்பியன்ஸ் போட்டி அட்டவணை முடிவு செய்வது குறித்து ஐசிசி நிர்வாக கமிட்டி கடந்த 2 நாட்களாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதில் முதல் நாள் கூட்டத்தில் எந்தவித சுமுகமான முடிவையும் எடுக்கவில்லை.

இரண்டாவது நாள் நடைபெற்ற இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அணிக்குரிய போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் இந்த ஹைபிரிட் மாடல் கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை எனில் ஐசிசிக்கும், பாகிஸ்தானுக்கும் மிகப் பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்பதால் இந்திய அணிக்கான ஆட்டங்களை மட்டும் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது, அதாவது இந்திய சாம்பியன் டிராபிக் தொடர் லீக் சுற்றையே தாண்டவில்லை என்றால் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை பாகிஸ்தானில் கட்டாயமாக நடத்த வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் இந்தியாவில் ஐசிசி தொடர் நடைபெறும் போது பாகிஸ்தான் அணி பங்கேற்காது. வேறு இடங்களில் மாற்றினால் மட்டுமே விளையாடும் எனவும், இதற்காக கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.