மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரான சரத் பவார் கூறியதாவது, நான் ஆட்சியில் இல்லை. இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினராக எனது பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது. அதன் பிறகு, நான் மீண்டும் மாநிலங்களவை செல்வதால், இல்லையா என்பதை பற்றி நான் யோசிக்க வேண்டும்.

இனிமேல் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். கட்சி சார்பில் யாரையாவது நிறுத்துவேன். இதுவரை நான் மொத்தம் 14 தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளேன். எந்த தேர்தலிலும் நீங்கள் என்னை விட்டுக் கொடுக்கவில்லை, ஒவ்வொரு தேர்தலிலும் நான் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு அதிகாரம் வேண்டாம். மக்களுக்கு தேவையான சேவைகளை தொடர்ந்து செய்வேன் என்று அவர் கூறினார்.