செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் என்ன சொல்ற… நீ இந்த நாட்டுல மாட்டுக்கறி திங்காத… அந்த கறி திங்காத…. பன்னிக்கறி திங்காத.. எதையும் சொல்லு. முதல்ல என் உணவை  உறுதி செய்ய. அப்புறம் இதை திங்காதன்னு சொல்லு. உணவை உறுதி செய்ய முடியுமா ? உன்னால முடியல.  அப்புறம் நான் என்ன சாப்பிட்டா உனக்கு என்ன ? அங்க இருக்கிற அகோரிகள் எல்லாம் மனித உடல்… உயிருள்ள எதையும் சாப்பிடக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டு…  காய்கறி கூட சாப்பிடுவதில்லை….

இறந்த உடலை அப்படி  வெந்துகிட்டு  இருக்கிறத எடுத்து ரொட்டியில்  வைத்து திங்குறாங்க. அது என்ன பண்றது ?  அந்த அகோரிகள் எல்லாம் தூக்கி உள்ள போடுவிங்களா ?  கேவலம்ன்னு பேசுவீங்களா ? அப்புறம்….  உணவு அவனுடைய விருப்பம். நான் கூட என்ன சொல்லுவேன்.. டேய்… நாகலாந்து  பிரியாணி போடுடான்னு சொல்லுவேன்… அது அவன் விருப்பம். அங்க இருக்கிறவன் எனக்கு உறவினர் இருக்கான்.

நாங்க நாகர்கள் தானே… நாகலாந்து என எப்படி பெயர் வந்தது  பூர்வீக குடி. அவன் விருப்பம்…. நான் எண்ணந்தையும் தின்பேன்… காவேரியில் தண்ணீர் வரமால் இந்தப்ப    எலி கறி தின்னேன்.  பாம்பு கறி  தின்ன…  அப்ப எங்க போன நீ ? அப்ப எல்லாம் ஒன்னும் பேசல… நான் நத்தை தின்பேன்…  நண்டு தின்பேன்… உனக்கு விருப்பம் என்றால்,  தின்னு இல்லனா.. அங்கிட்டு போடா,  உன் வேலைய பாருடா…  சும்மா அதை திங்காதே,  இதை திங்காதன்னு சொல்லிக்கிட்டு என பேசினார்.