
ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜ மகேந்திர வரம் பகுதியை சேர்ந்தவர் ராமரெட்டி (70). இவருக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளதால் இதுவரை இவர் 61 பட்டங்கள் பெற்றுள்ளார். இவர் ஒரு மனநல மருத்துவர்.
மேலும் ராம ரெட்டி கடந்த 2023 ஆண்டு வரையில் 50 பட்டங்களை பெற்றுள்ளார். அதன் பின் தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றலில் கடந்த 2024 ஆம் ஆண்டு கரக்பூர், மும்பை, சென்னை உள்ளிட்ட ஐ.ஐ.டிகளில் 11 பட்டங்களை பெற்றுள்ளார்.
தற்போது அவருக்கு 70 வயதாகிய நிலையில் 61 பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தனக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு எனவும், தனது உடலில் மூச்சு இருக்கும் வரை கல்வியை தொடர்வேன் எனவும் ராம ரெட்டி தெரிவித்துள்ளார். கல்வி மீது மிகுந்த ஆர்வம் உடைய மனநல மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.