நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி போன்ற காட்சிகள் பங்கேற்றது.

கூட்டம் முடிந்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளனர். பேட்டியின் போது “நான் இப்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன். நரேந்திர மோடியை இனி தகுதியாக மாற்றுவேன். நம் நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. சிம்லாவில் ஜூலை மாதத்தில் இன்னொரு கூட்ட நிரலை தயார் செய்வோம். பாஜகவை எதிர்ப்பதற்கு 2024ல் ஒவ்வொரு மாநிலங்களில் ஒன்றிணைந்து முன்னேறுவோம்” என லாலு பிரசாத் கூறியுள்ளார்.