
ஆரம்பத்தில் சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின். இவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு நாயகனாக என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்றார். இதை அடுத்து இவர் நடிப்பில் ரிலீசான லிஃப்ட் திரைப்படம் ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றது. தற்போது டாடா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ், அபர்ணா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் கவின் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து இருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இன்று கோவிலுக்கு சென்றேன் என குறிப்பிட்டு இருக்கின்றார். இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
Went to temple today 🙂 @ikamalhaasan sir 🙏🏼🙏🏼🙏🏼♥️ pic.twitter.com/Oz6A62Wp4s
— Kavin (@Kavin_m_0431) February 11, 2023