தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன். இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துவரும் “தக்லைஃப்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, “தக் லைஃப்” திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எனக்கு பாடல் வாய்ப்பு என்பதே என் தந்தையை அடுத்து ஏ.ஆர்.ரகுமான் சார் தான் ஏற்படுத்திக் கொடுத்தார். அவருடன் நான் சிறுவயதிலிருந்தே பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்த பிறகு தான் தமிழ் மற்றும் இந்தியில் கிட்டத்தட்ட 150 பாடல்கள் வரை பாடியுள்ளேன்.

ஒரு சமயத்தில் என்னை வைத்து படம் எடுப்பதற்கு அனைவரும் பயந்த நிலையில், என் மீது நம்பிக்கை வைத்து படம் எடுத்தவர் மணிரத்தினம் சார். தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்த நிலையில் 2018 ஆம் ஆண்டு தன்னை “செக்க சிவந்த வானம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மணிரத்னம் சார் அழைத்தார்.

மிகவும் இக்கட்டான நேரத்தில் திரையுலகில் எனது திறமையை வெளிப்படுத்த மணிரத்தினம் சார் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி. அவரை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று கூறினார்.