
வயது என்பது வெறும் எண்கள் தான் என பலரும் இன்றைய காலகட்டத்தில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர். பணி ஓய்வு பெற்ற பின் பலரும் தங்களது பணிகளை தாங்களே செய்து கொள்கின்றனர். வயதாகியும் வீட்டிலேயே இருக்காமல் உழைத்து சாப்பிட வேண்டும் பிறரை சார்ந்து வாழக்கூடாது என்பதை காட்டி வருகின்றனர். இதேபோன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். அவரது வயது 100யும் தாண்டி 108 வயது.
இருந்தாலும் முதுமையில் குடும்பத்தினரை சார்ந்திருக்காமல் காய்கறி வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார். ஓய்வெடுக்க வேண்டிய வயதில் தெருவில் வண்டியில் காய்கறிகள் வைத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று விற்று வாழ்க்கையை நகர்த்துகிறார். இன்றைய இளம் பருவத்தினருக்கு அதிக தன்னம்பிக்கை மற்றும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார். இந்த முதியவர் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் மூன்றே நிமிடத்தில் 3 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.
View this post on Instagram