
இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறாததற்கு முன்னாள் வீரர் பத்ரிநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜூக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என இரண்டிலும் சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனக்கு டி20 போட்டியில் சுப்பன் கில் ஏன் இருக்கிறார் என்பதே புரியவில்லை. பிசிசிஐ-ல் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவு இருப்பது போன்று சுப்பன் கில்லுக்கும் ஆதரவு இருக்கிறது. அவரை சூப்பர் ஸ்டார் வீரராக உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
எப்போதுமே மும்பை, டெல்லி மற்றும் பஞ்சாபை சேர்ந்த வீரர்களை மட்டும் தான் பிசிசிஐ வளர்க்கிறது. இத்தனை ஆண்டுகளில் ஒரு தமிழக வீரருக்கு கூட இப்படி ஒரு ஆதரவு கிடைக்கவில்லை. அது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. அதன்பிறகு ருதுராஜ் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்தான். ஒரு சில சமயங்களில் ருதுராஜ் மட்டும் ரிங்கு சிங் ஆகியோர் தேர்வு செய்யப்படாமல் இருக்கும்போது ஒரு bad boy இமேஜ் தேவை என்பது போல் இருக்கும். நல்ல மேனேஜர், நல்ல மீடியா மற்றும் உடம்பில் பச்சை குத்தி கொள்வது போன்ற செயல்களை செய்தால்தான் அவர்களை தேர்வு செய்வார்கள் என்று தோன்றுகிறது. மேலும் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றி இத்தனையும் செய்தால்தான் அவர்களை தேர்வு செய்வார்களா என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதோடு I need justice for ruturaj என்றும் பதிவிட்டுள்ளார்