
தமிழ் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றார். இயக்குனர் பாலா முதன்முதலில் சேது திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் நடிகர் விக்ரமிற்கு புகழை அள்ளித் தந்தது. இயக்குனர் பாலா சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் நான் கடவுள் படத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ளார்.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் “வணங்கான்” திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் குறித்து சமீபத்தில் பாலா தனது கருத்து ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது, மாற்றுத்திறனாளிகளை உலகத்திற்கு காட்ட வேண்டும் . அதனால்தான் வணங்கான் போன்ற படங்களை எடுத்துள்ளேன். குற்றம் செய்பவர்களுக்கு இத்திரைப்படத்தில் வழங்கப்பட்ட தண்டனை விட கூடுதலான தண்டனையை வழங்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. மாற்றுத்திறனாளிகளை பரிதாபமாக பார்த்து ஒதுக்கி விடக்கூடாது அவர்கள் நம்மை நம்பி தான் அவர்களது வாழ்க்கையை நகர்த்துவதாக கூறினார்.