தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் “பரதேசி” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.  இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேட்டி அளித்தார்.

அதில் “என்னுடைய வாழ்க்கையில் 2 காதல் உள்ளது. என் அம்மா தான் என்னுடைய முதல் காதல்….முத்தான காதல் என்று கூறிய அவர், 2வது காதல் நடனம் என்று கூறியுள்ளார். “நடனம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் நான் நடனம் ஆடிக்கொண்டே இருப்பேன்” என்று கூறினார். அதோடு “இந்த 2 காதலும் எனக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்” என்று கூறினார். அப்போது ஆண்கள் மீது காதலே வராதா? என்று அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று பதில் அளித்துள்ளார்.