சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், என் டைம் லைன்ல சிலரோட பதிவுகள் மிஸ் ஆனாலும்,  ஐடிவிங்,  செய்தித்துறை, உளவுத்துறை, என்னுடைய நண்பர்கள் பலரும் உங்களுடைய பதிவுகளை எனக்கு அனுப்பி வச்சுக்கிட்டு தான் இருக்காங்க. அந்த வகையில நான் உங்களுடைய பாலோவர். பார்க்காமலேயே நண்பர்களாக இருந்த கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையார் போல தான் நம்முடைய நட்பும்,  உறவும். அந்த நட்பு உணர்வோடு தான் உங்களை நான் இன்னைக்கு பார்க்க வந்திருக்கிறேன்.

இந்த சந்திப்புல நான் ஷேர் பண்ற செய்திகளை,  நீங்கள் லைக் பண்ணுவீங்கன்னு நம்புறேன். லைக் பண்ணா மட்டும் போதாது,  அதை நீங்கள் ரீ ஷேர்  பண்ணனும். பண்ணுவீங்க தானே.. பண்ணுவீங்க தானே… கரை வேட்டி கட்டினவங்க,  கட்டாதவர்கள் அப்படின்னு திமுககாரங்களை கலைஞர் அவர்கள் இரண்டு வகை படுத்துவார். அதாவது கரை வேட்டி கட்டினவங்க…. கர வேட்டி கட்டாதவர்கள் என திமுககாரர்களை கலைஞர் இரண்டு வகை படுத்துனாங்க.

சிலர் நேரடி அரசியலில் ஈடுபட மாட்டாங்க. ஆனால் வாய்ப்பு கிடைக்கிற போது எல்லாம் தமிழகத்தினுடைய மீட்சிக்காக உருவான இயக்கம் திமுக தான் என்று உரக்க சொல்லுவாங்க. கரை வேட்டியை கட்டுனவுங்க சிங்கிள் டீ குடிச்சிட்டு வேலை பார்ப்பாங்கன்னா… கரை வேட்டி கட்டாதவர்கள்,  எலக்சன் டைம்ல வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு,  உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்க கிளம்பிடுவாங்க. இந்த பாரம்பரியத்தோட அப்டேட் வெர்சன் தான் நீங்க.

கட்சிக்கு அரணாக  இருக்கின்ற கரை கட்டுனவுங்க போர்வாள்.  இணையத்தில் இயக்கத்துக்காக உணர்வு பூர்வமாக பதிவு போடுற நீங்க  பயர் வால். கொட்டப்பட்டு கொட்டப்பட்டு வளர்ந்தவன் நான். அதில் நான்  எதிரிகளுக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் வளர்ந்து இருக்கவே முடியாது. யாருக்கெல்லாம் நன்மை செஞ்சேனோ…  அவர்களால் அதிகமாக தாக்கப்பட்டவன் என  சொன்னது யார் தெரியுமா ?  நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இதெல்லாம் நமக்கான பாடங்கள். அதுக்காக யாருக்கும் பதில் சொல்ல கூடாது, எல்லா விமர்சனங்களையும் ஒத்துக்கொள்ளும் அப்படின்னு நான் சொல்லல என தெரிவித்தார்.