தென்னிந்தியாவின் மிக பிரபலமான நடிகை நயன்தாரா. இவர் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான வெற்றி படம் தான் “நானும் ரவுடிதான்”இந்தப் படத்திலிருந்து தான்  இயக்குனர் விக்னேஷ் சிவனை, நடிகை நயன்தாரா காதலித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த வீடியோ கொடுத்த சர்ச்சையும் சமீபத்தில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் நடிகர் மிர்ச்சி சிவா நிகழ்ச்சி ஒன்றில் நானும் ரவுடிதான் படத்தை குறித்து பேசியது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதில் அவர் கூறியதாவது, நானும் ரவுடிதான் படத்தில் நடிகராக நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு தான் வந்தது. நான் நடிகராக நடித்திருந்தால் நயன்தாரா எனக்கு ஜோடியாக நிச்சயம் நடித்திருக்க மாட்டார். நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தை நடிக்கவில்லை என்றால் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் வந்திருக்காது இருவருமே திருமணம் செய்திருக்க மாட்டார்கள். எனவே விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி தற்போது மகிழ்ச்சியாக வலம் வருவதற்கு முக்கிய காரணமே நான் தான் என கிண்டலாக பேசினார்.