பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதாலா. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்பிறகு அருள் சரவணன் நடிப்பில் தமிழில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் ஊர்வசி ஹீரோயின் ஆக நடித்திருந்தார். நடிகை ஊர்வசி சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். இவர் சில சமயங்களில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு ஆதரவாகவும் சில நேரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் கருத்துக்களை பதிவிடுவார். ஊர்வசியும் ரிஷப் பண்டும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில், அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அதிர வைத்தார் ஊர்வசி.

இதுகுறித்து நசீமிடம் கேட்டபோது ஊர்வசி யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த நசீமிடம் ஊர்வசியை நீங்கள் காதலிக்கிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்ப நான் இது பற்றி என்ன சொன்னாலும் நீங்கள் வைரல் ஆக்குவீர்கள். மணப்பெண் தயாராக இருந்தால் திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இதனால் தற்போது ஊர்வசி மற்றும் நசீம் காதலிப்பதாக இணையதளத்தில் தகவல்கள் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.