தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான நடிகராக இருப்பவர் சேத்தன். தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வரும் சேத்தன் தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்தில் ஓசி எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். காவல் நிலையங்களில் இப்படியும் ஒரு அருவருப்பான காவல் அதிகாரி இருப்பாரா என்று கேட்கும் அளவுக்கு சேத்தன் ஓசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விடுதலைப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து நடிகர் சேத்தன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியின் போது விடுதலை திரைப்படத்தை பார்த்துவிட்டு தியேட்டர் வாசலில் தன்னுடைய மனைவி தேவதர்ஷினி தன்னை அடித்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு என்னுடைய மனைவியின் தோழிகள் எப்படி இவருடன் இத்தனை வருடங்கள் வாழ்கிறாய் என்று கேட்டனர். என்னை பலர் திட்டினாலும் என்னுடைய நடிப்புக்கு கிடைத்த விமர்சனமாக தான் இதை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் சேத்தனின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.