
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் ஒரே நாட்களில் டெலிவரி ஆகி விடுகின்றனர். இந்நிலையில் ஜெய் என்பவர் ரூ.1734-க்கு பிரஷர் குக்கரை ஆர்டர் செய்துள்ளார். அதன் பின் அவர் அந்த ஆர்டரை அமேசானில் இருந்து கேன்சல் செய்துவிட்டு பணத்தையும் திரும்ப பெற்றுள்ளார். இருப்பினும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு அந்த குக்கர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
அவர் ஆர்டர் செய்த நாள் அக்டோபர் 1 2022, அந்த ஆர்டர் டெலிவரி செய்த நாள் ஆகஸ்ட் 28 2024. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, 2 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய ஆர்டரை டெலிவரி செய்ததற்கு நன்றி அமேசான் என்று பதிவிட்டிருந்தார். இது சிறப்பான குக்கராக ஆக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.