இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணமாகும். தற்போது ஆதார் அட்டையில் பிறந்த தேதியை எப்படி மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். ஆதார் அட்டையை மாற்றுவதற்கு நேரடியாக நீங்கள் ஆதார் சேவை மையத்தை அணுகலாம்.

அதன் பிறகு உங்களுடைய ஆதார் கார்டில் மொபைல் எண்ணை இணைக்கவில்லை என்றால் https://tesz.in/Application Form/Aadhar correction from.pdf என்ற வெப்சைட்டில் ஆதார் புதிப்பிப்பு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து படிவத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம்.

மேலும் இணையதளம் மூலமாக பிறந்த தேதியை மாற்றுவதற்கு https://ssup.uidai.gov.in/web/guest/update என்ற வெப்சைட்டில் சென்று அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்த பிறகு தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்தால் பிறந்த தேதியை மாற்றிவிடலாம்.