இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வியப்பூட்டும் விதமாக அமைகிறது. குறிப்பாக சில சமயங்களில் தோன்றும் வீடியோக்கள் உண்மையாகவே நடந்ததா என்று நம்மிடையே கேள்விகளை தூண்டும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பள்ளி முடிந்த பிறகு குழந்தைகள் அனைவரும் வீட்டிற்கு செல்ல தயாராகிறார்கள். அப்போது ஒரு சிறுமி ஓடி வந்து ஒரு மர வண்டியில் அமர்ந்து உட்கார்ந்தார்.

அப்போது அருகில் இருந்த நாய் உடனடியாக மரவண்டிக்குள் வந்து வண்டியை இழுத்துச் சென்றது. குழந்தை அழகாக உட்கார்ந்த நிலையில் வண்டியை வீடு வரை நாய் இழுத்துக் கொண்டே சென்றது. ஆனால் இதனை யாரும் அருகில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை. அவரவர் வேலையை மட்டுமே பார்த்தனர். இதிலிருந்து அந்த குழந்தை தினசரி இப்படித்தான் பள்ளிக்கு சென்று வருகிறது என்பது தெரிகிறது. மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் லைக்ஸ் களை குவித்து  வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by AmazingTaishun (@amazingtaishun)