குஜராத்தின் டான் மாவட்டத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் இதில் பங்கேற்ற பக்தர்கள் தங்களது வீட்டிற்கு திரும்ப தனியார் பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நாசிக்-சூரத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது. முதற்கட்ட தகவலின் படி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தர்வர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த அனைவரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.