ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு போக திட்டமிட்டு இருக்கிறீர்கள் எனில், இப்படி செய்தால் உங்களது ரயில் டிக்கெட் உறுதிசெய்யப்படும். அதன்படி, தட்கல் முறையில் ரயில் டிக்கெட்டை உறுதிப்படுத்தி கொள்ளலாம். முதலாவதாக irctc.co.in (அ) IRCTC Rail Connect செயலிக்கு சென்று லாகின் செய்ய வேண்டும். IRCTC ரயில் முன் பதிவு செயலியில் தட்கல் முறையில் முன் பதிவு செய்ய, உரிய நேரம் பார்த்து நீங்கள் லாகின் செய்யவும்.

ஏசி வகுப்பில் உங்களது டிக்கெட்டை முன் பதிவு செய்ய விரும்பினால் காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்பில் உங்கள் டிக்கெட்டை முன் பதிவு செய்ய விரும்பினால் காலை 11 மணிக்கும் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகும். அந்த சமயத்தில் புக் நவ் எனும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். எனினும் ரயில்வே சர்வரில் 2 நேரங்களிலும் Book Now பட்டன் பச்சை நிறத்தில் இருக்கவேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

அப்போது தான் நீங்கள் அடுத்த செயல்பாட்டில் முன்னேற இயலும். கவனமாக படித்தபின் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு அடுத்து என்பதை கிளிக் செய்யவும். அதன்பிறகு பணம் செலுத்தும் பக்கத்தில் பல விருப்பங்களை பெறுவீர்கள். இருப்பினும் இணைய வங்கியின் விருப்பத்திற்கு சென்றபின், நீங்கள் வங்கி வாடிக்கையாளர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு மட்டுமே OTPஐ உள்ளிட வேண்டும். IRCTC-ல் இருந்து உடனடி டிக்கெட் உறுதிப்படுத்தலை பெற விரும்பினால், வேகமான இணைய இணைப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.