கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதுவும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து கிடக்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொடைக்கானல் போன்ற குளிர்ந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.