
செம்பருத்தி டீ யால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
- செம்பருத்தி டீ குடிப்பதால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு ரத்தத்தில் அதிக கொழுப்புகள் சேர்வதை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
- ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த டீயை குடிப்பதால் பெண்களுக்கு கருப்பை கட்டிகள் கரையுமாம்.
- செம்பருத்தி டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதால் காய்ச்சல் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த டீயை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
- இந்த டீ பருகுவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியையும் போக்க முடியும்.
இவ்வளவு நன்மைகள் வாய்ந்த செம்பருத்தி டீ யை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
செம்பருத்தி இதழ் – 5 காய்ந்த இதழ்
நாட்டு சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் செம்பருத்தி இதழ்கள் ஐந்தையும் சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் தண்ணீரை வடிகட்டி அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம்.
குறிப்பு: காலை உணவை சாப்பிட்ட பிறகு குடிப்பது நல்லது.