
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ரயிலில் யூடியூபர் ஒருவர் பயணம் செய்கிறார். அந்த ரயில் குகைக்குள் செல்கிறது.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 11, 2025
இதனை அவர் ரயிலின் வாசலில் நின்று தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கிறார். அப்போது குகைக்குள் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த குச்சியை பயன்படுத்தி அவரது கையை தட்டு விடுகிறார். இதில் யூடியூபர் செல்போன் கீழே விழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.