சினிமா பிரபலங்கள், திரைப்படங்கள், வெப் தொடர் ஆகியவற்றின் டாப் 10 லிஸ்ட்டை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்று இந்தியர்களால் கூகளில் அதிக தேடப்படும் டாப் 10 இந்திய பிரபலங்கள் யார் என்பதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2024ம் வருடம் google-ல் அதிக தேடப்பட்ட பிரபலங்கள் லிஸ்டில் முதலிடத்தில் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் பெற்றுள்ளார். இதில் 2ம் இடத்தில் பீகார் மாநிலத்தின் முதல்வரான நிதீஷ் குமார் உள்ளார். இவர் இந்தியா கூட்டணியில் இருந்து, என்டிஏ கூட்டணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது. ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் 3ம் இடத்தை பிடித்துள்ளார். இதில் 4ம் இடத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா உள்ளார்.

இவருக்கும் நடாஷா ஸ்டான்கோவிக் உடனான விவாகரத்து ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் கூகுளில் அதிகமாக தேடியுள்ளனர். தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பவன் கல்யாண் 5ம் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து 6ம் இடத்தில் கிரிக்கெட் வீரரான ஷஷாங் சிங் இடம் பெற்றுள்ளார். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருக்கும் பூனம் பாண்டே 7ம் இடத்தை பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 8ம் இடத்தில் முகேஷ் அம்பானியின் மருமகளான ராதிகா மெர்ச்சண்ட் உள்ளார். இதையடுத்து 9ம் இடத்தில் கிரிக்கெட் வீரரான அபிஷேக் சர்மா இடம் பிடித்துள்ளார். இறுதியாக 10ம் இடத்தில் பேட்மிட்டன் வீரர் அக்ஷ்யா சென் உள்ளார்.