
உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை நதி கரையில் தாஜ்மஹால் உள்ளது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவிடமாக தாஜ்மஹாலை 17ஆம் நூற்றாண்டில் கட்டினார். இது ஆக்ராவில் சிறந்த சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது மேலும் இதனை பார்ப்பதற்கு தினமும் வெளிநாட்டு பயணிகள் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆக்ராவில் பெய்து வரும் அதிகப்படியான மழையால் தாஜ்மஹாலில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த தினங்களாக அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது.
இதில் முக்கியமாக ஆக்ராவில் எந்த நாட்களிலும் இல்லாத அளவிற்கு 151 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே ஆக்ராவில் 80 ஆண்டுகளுக்கு பின் முதல் பெரும் மழையாகும். இதனால் தாஜ்மஹாலின் மேல் மாடங்களில் உள்ள துளைகளில் மழைநீர் கசிவு ஏற்படுகிறது என ஆக்ரா கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் திரு. ராஜ்குமார் பட்டேல் கூறினார். மேலும் அவர் கூறியதாவது, இந்த கசிவு சாதாரண நிகழ்வு தான் இதனால் தாஜ்மஹாலின் மேல் குவி மாடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதனை ட்ரோன் கேமரா மூலம் ஆராய்ந்து பார்த்தோம். தொல்லியல் துறை தாஜ்மஹாலில் நீர்க்கசிவை கவனிக்க ஆணையிட்டுள்ளது.