திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 5000 முதல் 7000 கன அடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றுக்கு குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் துணி துவைக்கவும் சொல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.