
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின் தலைவா, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆடு ஜீவிதம் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட இவர் தனது கணவரை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, முதலில் நானும் என் கணவரும் கோவாவில் சந்தித்தோம். அவர் குஜராத்தி என்றாலும் கோவாவில் தான் வசித்து வந்தார். அவருக்கு தென்னிந்திய படங்களை பார்க்கும் பழக்கம் கிடையாது.
அதனால் நான் ஒரு நடிகை என்பது அவருக்கு தெரியாது. நானும் அதை காட்டிக் கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகுதான் அவருக்கு தெரியவந்தது. நான் கர்ப்பமாக இருக்கும் போது தான் என்னுடைய படங்களை அவர் பார்த்தார். அவருக்கு விருது நிகழ்ச்சிகளை பார்ப்பது மிகவும் பிடிக்கும். நான் விருது விழாவிற்கு சென்று விருது வாங்குவதையும், ரெட் கார்பெட்டில் நடுப்பதையும் அவர் மிகவும் வியப்பாக பார்த்தார் என்று கூறினார்.